சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு..!!

 
Q

கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் தங்கம் விலை அதிகரித்த நிலையில், இந்த ஆண்டும் விலையேற்றம் தொடரும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். அதே போன்று 2026-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

இந்த நிலையில், தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவதன் விளைவாக, இவற்றின் விலையில் அன்றாடம் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் இன்று (பிப்.24) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,19,120க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ 2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.