தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..

 
தங்கம் விலை


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 அதிகரித்து சவரன் ₹44,720-க்கு விற்பனையாகிறது.  ஒரு கிராம் தங்கம் ₹5,590-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. திடீரென ஏற்றம் காணும் தங்கம் விலை பின்னர் மெல்ல மெல்ல சரிய தொடங்குகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,600 ஆகவும், ஒரு சவரன்  ரூ.44,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து நேற்று  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.5580 க்கும்,  ஒரு சவரன் ரூ.44,640 -க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை
 
இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்திருக்கிறது. அதன்படி சென்னையில் 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 அதிகரித்து ஒரு சவரன்  சவரன் ₹44,720-க்கு விற்பனையாகிறது.  கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து  ஒரு கிராம் தங்கம் ₹5,590-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்  வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள்  உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 79.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.