தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரிப்பு..

 
gold gold


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை என்று  சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 664 அதிரடியாக குறைந்தது.  அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் 5,692 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம்   45,536  ரூபாய்க்கும்  விற்பனையானது.  தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி அதே விளையில் விற்பனையானது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

 இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.  அதன்படி சென்னையில்  ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ.45,680க்கும் விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 5,710க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.  தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் அதிகரித்திருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் 30 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி  82 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700க்கு விற்கப்படுகிறது.