தொடர் சரிவில் தங்கம் விலை..!! இதுதான் சரியான நேரம்..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!


தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து ஒரு சவரன்  ரூ.43,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடனேயே இருந்து வருகிறது. கடந்த வாரங்களில் குறைந்து வந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்டது. பின்னர் மீண்டும் குறையத் தொடங்கி , தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் அதிரடியாக சவரனுக்கு 232 ரூபாயும், நேற்று சவரனுக்கு 72 ரூபாயும் குறைந்தது. அதன்படி நேற்று ஒரு கிராம் ரூ.5,437க்கும், ரூ. 43,496க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி  ஒரு கிராம் 75 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்  விலை நிலவரம்

இந்நிலையில்  இன்றும் தங்கம் விலை  சவரனுக்கு 56  ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ஒரு கிராமுக்கு ரூ. 5,430 ஆகவும், சவரனுக்கு ரூ. 56 குறைந்து ஒரு சவரன் 43,440 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இன்றைய தினம் வெள்ளி 50 காசுகள் குறைந்து  ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய் 80 காசுகளாகவும்,  ஒரு கிலோ வெள்ளி 74 ஆயிரத்து 800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மாதக் கடைசியில் தங்கம் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.