தொடர் சரிவில் தங்கம் விலை.. சவரன் ரூ.44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்   விலை நிலவரம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின்   விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ.43,880க்கு விற்பனையாகிறது.  

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடனேயே  இருந்து வருகிறது.  சில நாட்கள் குறைந்த அளவு சரிவதும், அடுத்த நாளே அதிரடியாக உயர்வதுமாக  இருந்து வரும் தங்கம் விலை  கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது.  அந்த வகையில்   வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பின்னர்   செவ்வாய்கிழமை  தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,535 ரூபாய்க்கும்,  ஒரு சவரன்  ரூ. 44,280 க்கும் விற்பனையானது.  நேற்றும்  தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.5,505 க்கும், ஒரு சவரன் ரூ. 44,040க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்திருக்கிறது.  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதன்மூலம் சென்னையில் 22 கேரட்  ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,485க்கும், சவரன் ரூ.43,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் கனிசமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்த நிலையில் , நேற்று அதிரடியாக கிராமுக்கு 2 ரூபாய் 10 காசுகள் சரிந்து  ரூ. 76.50 காசுகளுக்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று  ஒரு கிராம் வெள்ளி ரூ.1.50 குறைந்து ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.75,000க்கு விற்கப்படுகிறது.