மீண்டும் அதிகரித்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை விலை குறைந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து, 76.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.76.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.76,700 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.