ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. அதிரடியாக சவரனுக்கு ரூ.304 உயர்வு...

 
தங்கம்


தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் அபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து ரூ.36,752 க்கு விற்பனையாகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தங்கத்தின் மீதான மோகம் ஒருபுறம் இருக்க, தங்க முதலீட்டை சிறந்த சேமிப்புத் திட்டமாகவும் பெண்கள் நினைக்கின்றனர்.  அந்தவகையில் தென்னிந்திய நகரங்களில்  சென்னையில் தான் தங்கத்தின் வர்த்தகம் அதிகமாக இருப்பதாவும் கூறப்படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

தீபாவளிக்குப் பிறகு தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் (டிச) தொடக்கத்திலிருந்து ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது.  தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு  304 ரூபாய் அதிகரித்திருக்கிறது.  டிசம்பர் 1 ஆம் தேதி ரூ.4,488 ப்ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.4,594 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இந்த 17 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.848 அதிகரித்திருக்கிறது.

 கடந்த 15-ந்தேதி பவுனுக்கு ரூ.216 குறைந்து ரூ.36,120-க்கு விற்கப்பட்டது.   அதன்பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிரடியாக  உயர்ந்து வருகிறது. நேற்று சவரனுக்கு  ரூ.328 உயர்ந்திருந்த நிலையில் ,  இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. இன்று பவுனுக்கு ரூ.304 அதிகரித்து ரூ.36,752-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி

நேற்று  ரூ.4,556-க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று  ரூ.38 அதிகரித்து ரூ.4,594-க்கு விற்கப்படுகிறது.  இதேபோல் வெள்ளி விலையும் கடந்த 2 நாட்களாக உயர்ந்து வருகிறது. நேற்று  60 காசுகள் அதிகரித்து ரூ.65.10-க்கு விற்கப்பட்ட இரு கிராம் வெள்ளி, இன்று  மேலும் 80 காசுகள் அதிகரித்து ரூ.65.90-க்கு விற்கப்படுகிறது. இன்று ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.65,900 ஆக உள்ளது.