தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

 
gold

தொழில்துறையில் நிலவும் தேக்கத்தின் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஒரு நாள் விலை உயர்ந்தால் மறுநாள் குறையும் சூழலே கடந்த 2 மாதங்களாக நீட்டிக்கிறது. கடந்த ஆண்டில் ரூ.29 ஆயிரத்தில் விற்பனையானதைப் போல தங்கம் விலை குறையுமா என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.35 முதல் ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வருகிறது.

gold

நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,515க்கும் ஒரு சவரன் ரூ.36,120க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,528க்கும் ஒரு சவரன் ரூ.36,224க்கும் விற்பனையானடது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,538க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,304க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,200க்கும் விற்பனையாகிறது.