தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 சரிவு..

 
தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் குறைந்து ஒரு சவரன்  ரூ. 43,568 ஆவது விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த வாரங்களில் தொடர்ந்து குறைந்து வந்து தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்டது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,475 ரூபாயாக விற்பனையானது. அதேபோல் வெள்ளியின் விலை கிராம் இருக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.  75. 70 காசுகளாக விற்கப்பட்டது. 

தங்கம் விலை

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 29 குறைந்து ஒரு கிராமுக்கு ரூ. 5,440 ஆகவும், சவரனுக்கு ரூ. 232 குறைந்து ஒரு சவரன் 43,568 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இன்றைய தினம் வெள்ளி விளையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி 75 ரூபாய் 70 காசுகளாகவும்,  ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரத்து 700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.