தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு..

 
gold


 தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ224 அதிகரித்து  ஒரு சவரன் 44,640 ரூபாய்க்கும்,  கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 5,580-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்த நிலையில் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து  ஒரு சவரன் 44,400 ரூபாய்க்கும் , அதேபோல்  கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

 தங்கம் விலை

இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்திருக்கிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.44,520க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,565க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலையும் கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாயாகவும், ஒரு கிலோ 80,000 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.