தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த வியாழன் அன்று  கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம்  ரூ.5,535-க்கும்,  சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கும்  விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 1 ரூபாய் 80 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கும்,  ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.78,500 க்கும் விற்பனையானது.  நேற்றைய தினம் தங்கம் விலை மாற்றமின்றி விற்கப்பட்டது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.44,000-ஐ தாண்டியது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம்  கிராமுக்கு ரூ.20 அதிகரித்து,  ஒரு கிராம் ரூ. 5,555க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து  ஒரு சவரன் ரூ.44,440க்கும் விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில்  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.78.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 78,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.