இன்றும் உயர்ந்தது தங்கம் விலை - ரூ. 55ஆயிரத்தை நெருங்குகிறது!!

 
gold

சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.   நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து,  இதன் மூலம் தங்கம் ஒரு கிராம் ரூ.6,710க்கு விற்பனையானது.  ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,680க்கும் விற்பனையானது.

gold

நேற்று  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 54,040க்கும், கிராமுக்கு  ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6755க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து,   கிராம் ரூ.88க்கும், ஒரு கிலோ ₹88,000க்கும் விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. 
ஒரு கிராம் தங்கம் ரூ.6,770க்கும், ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்பனையாகிறது.