ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1,560 உயர்வு..

 
தங்கம் விலை  தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தங்கம் விலை  கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடி ஏற்றங்களை கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.50,000 என்கிற அளவில் இருந்த தங்கம் விலை, நடப்பு ஆண்டில் ரூ.70,000ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. அதன்பிறகும் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு இன்று  74 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.44,000-ஐ தாண்டியது..

அத்துடன் அவ்வப்போது குறைவதும் , உயர்வதுமாக போக்கு காட்டி வருகிறது. முன்னதாக கடந்த சனிக்கிழமை (ஜூன் 7) அன்று அதிரடியாக ரூ.1200 குறைந்து ஒரு சவரன் 71,840க்கும், ஒரு கிராம் ரூ.8,980க்கும் விற்பனையானது.  அதன்பிறகு மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை, ஜூன் 11 அன்று  ஒரே நாளில் ரூ.600 ஏற்றம் கண்டு சவரன் ரூ.72,160க்கும், கிராம் தங்கம் ரூ.9,020க்கும் விற்பனையானது.  இந்நிலையில் ஜூன் 12ல் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800க்கும்,  ரூ.9,100க்கு விற்பனை செய்யப்பட்டது. 

 இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்துள்ளது.  அதன்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ.74,360க்கு விற்பனையாகிறது.  அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.9,295க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் இந்த அதிரடியான விலையேற்றம் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கலக்கமடையச் செய்துள்ளது.