சென்னையில் இன்று தங்கம் விலை குறைவா? அதிகரிப்பா? - இன்றைய நிலவரம் இதோ!

 
gold

சென்னையில் இன்று தங்கம் விலை விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் ஆபரன தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி 30 பைசா உயர்ந்து 78 ரூபாய் 30 பைசாவாகவும், ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 30 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.