மீண்டும் குறைந்தது தங்கம் விலை!

 
gold

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

gold

நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42,360 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம்  5295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold
 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலையில் ரூ.10 குறைந்து  ஒரு கிராம் 5,285க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 42,280க்கும் விற்பனையாகிறது.