தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் - விலை நிலவரம் இதோ!!

 
gold

சென்னையில் தங்கம் விலையானது ஜூன் மாதம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக  தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கம் விலையை சற்று  குறைந்துள்ளது.

gold
இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை  ரூ.6,690-க்கு விற்பனையாகிறது.

gold

அத்துடன் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.95.60-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.