2வது நாளாக சவரனுக்கு ரூ.120 சரிந்த தங்கம் விலை..!

 
gold gold

சென்னையில் இரண்டாவது நாளாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.  

உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், கனிசமாக விலையேற்றம் கண்டுவந்துள்ளதே நிதர்சனம். கடந்த வாரத்தில்  தொடக்கத்தில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வந்த தங்கம் விலை  கடந்த வெள்ளிக்கிழமை (செப்.13) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாயும் ஏற்றம் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தினம் சென்னையில்  தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6,825க்கும் ,  ஒரு சவரன் ரூ. 54,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.  

gold

இதனைத்தொடர்ந்து  நேற்று முன்தினம் காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது.  தொடர்ந்து நேற்றைய தினம் முன்னதாக அதிகரித்த அதே 120 ரூபாய்  குறைந்து ஒரு கிராம் ரூ. 6,865க்கும், ஒரு சவரன் 54,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.  அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆரபணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 6,850க்கும் , ஒரு சவரன் ரூ. 54,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.