தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது...

 
தங்கம் விலை


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் ரூ.46,000 என்கிற புதிய உச்சத்தை எட்டியது. அதன்பின்னர் மீண்டும் அதிரடியாக குறைந்து , பின்னர் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஒருநாள் உயர்வதும், ஒருநாள் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக ஏற்றம் கண்டிருக்கிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

இந்த நிலையில் இன்று சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம்  ரூ.5,535-க்கும்,  சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் 48,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 1 ரூபாய் 80 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கும்,  ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.78,500 க்கும் விற்பனையாகிறது.