7வது நாளாக சரிவில் தங்கம் விலை..!!

 
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.44,000-ஐ தாண்டியது.. புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.44,000-ஐ தாண்டியது..


சென்னையில் தொடர்ந்து 7வது நாளாக  தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது.  

சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல், டாலருக்கு நிகராண இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியவை காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம் தான். உலகளவில் தங்கம் சிறந்த சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் அதன் விலை கணிசமாக ஏற்றம் கண்டு வருகிறது. அந்தவகையில்  கடந்த 8ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.75,760 என்கிற புதிய உச்சத்தை எட்டியிருந்தது.  

ஆனால் அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக  தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டு  அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.74,200க்கும் , ஒரு கிராம்  ரூ.9,2795க்கும் விற்பனையாகிறது.  அதேநேரம் சில்லறை விற்பனையில் வெள்ளி  விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.126க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,27,000க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.