2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா??

 
gold


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் விலை நேற்று அதிரடியாக  சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து.   ஒரு சவரன் 44,320 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து  ஒரு கிராம் தங்கம் 5,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  வெள்ளி விலையும் சற்று குறைந்து ஒரு கிராம் வெள்ளி  77.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

இதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக  இன்றைய தினமும் தங்கம் விலை குறைந்திருக்கிறது.  அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன்  44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,530 க்கும் விற்கப்படுகிறது.  இதேபோல் சென்னையில்  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் 76 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.76,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.