தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 குறைவு

 
gold

சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 55 ஆயிரத்தை தாண்டிய நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது.   கடந்த 20 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ₹40 குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை  ₹55,080க்கும் , ஒரு கிராம் ₹6,885க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

gold

நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ.54,760-க்கு விற்பனையானது. ஆபரணதங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.6,845க்கு  விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.89 க்கும் , வெள்ளி கிலோ 89,000க்கும் விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் இன்று (ஏப்.23) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ,145 குறைந்து ஒரு கிராம் ரூ.6700-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.