தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது..

 
தங்கம் விலை


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து , ஒரு சவரன் ரூ.44,440க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த சில அதிரடியாக ஏற்றம் கண்டு வந்தது. சவரன் 45 ஆயிரம் ரூபாயை நெருங்கி வந்த நிலையில், நேற்றய தினம் அதிரடியாக குறைந்தது. அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாயும், கிராமுக்கு 40 ரூபாயும் குறைந்து,   ஒரு சவரன் 44,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.82 ஆக விற்கப்பட்டது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி  விலை நிலவரம்

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சரிவை சந்தித்திருக்கிறது.  அந்தவகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,440க்கு விற்கப்படுகிறது.  அதேபோல் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 5,555க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அத்துடன் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 1.50 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.