அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ!!

 
gold

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

gold

ஆபரண தங்கத்தின் விலை ஆனது கடந்த மாதம் தொடக்கம் முதலில் உச்சத்தை தொட்டது.  இதன் பிறகு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்தில் குறைந்து காணப்படுகிறது.  மே மாத தொடக்கத்தில் 46 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் சற்று குறைய தொடங்கியுள்ளது சாமானியர்கள் மத்தியில் நிம்மதியை கொடுத்துள்ளது. குறிப்பாக தங்கம் விலை நேற்று முன்தின்ம் சவரனுக்கு ரூபாய் 464 குறைந்தது.

gold

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபர்ண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 5570க்கு விற்பனையாகிறது .அதேபோல் சவரனுக்கு ரூ.80  குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 44 ஆயிரத்து 560 ஆக உள்ளது.

tn

அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 77.70 காசுகள் ஆகவும்,  ஒரு கிலோ வெள்ளியின் விலை 77 ஆயிரத்து 700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.