மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது.

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று  முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு  கிராம் ரூ.5,550 -க்கு விற்பனையானது. அதேபோல் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய விலை நிலவரப்படி சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து, ஆபரண தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனையாகியது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து 5,505 ரூபாய்க்கு விற்பனையானது.

gold

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ஒரு கிராம் 5,542 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அத்துடன் சவரனுக்கு ரூ. 296 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,336 ஆகவும் உயர்ந்துள்ளது.