2 நாட்களில் ரூ.1680 குறைந்த தங்கம் விலை - தொடர் வீழ்ச்சியை சந்திக்குமா?

 
gold gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மே மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம்  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750க்கு விற்பனையாகியது.

gold

 நேற்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.800 சரிந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்து 53,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து 6,650 ரூபாய்க்கு விற்பனையானது. 

gold

கடந்த மார்ச்,  ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் ஒரு சவரன் 55 ஆயிரத்தை தாண்டியது.  இந்த தொடர் விலையற்றத்தால் நகைப்பிரியர்களும்,  சாமானிய மக்களும் கடும் அதிர்ச்சியை சந்தித்தனர்.  இந்த சூழலில் கடந்த  இரண்டு தினங்களாக தங்கத்தின் விலை ரூ.1680 குறைந்து காணப்பட்டது. இருப்பினும் தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.