தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.464 சரிவு..

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,580க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  அந்தவகையில்ன் நேற்று முன் தினம்  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 குறைந்து , ஒரு சவரன்  ரூ.44,960 க்கு விற்பனையானது.  அதேபோல்  கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம்   ரூ.5,620க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ. 5,638க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ. 45,104க்கும் விற்பனையாகி வருகிறது.

gold

இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.464 குறைந்திருக்கிறது. இது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ஒரு சவரன் ரூ.44,640க்கும் , கிராமுக்கு ரூ.58 குறைந்து ஒரு கிராம் 5,580 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் சரிவை சந்தித்திருக்கிறது.  அதன்படி, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.