14 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்தது

 
gold

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்துஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த 28ஆம் தேதி  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 560 குறைந்து, 43,280-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ,  ரூ. 5,410க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 29ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு, 160 குறைந்து, ரூ.43,120க்கு  விற்பனையானது.

gold

செப் மாதத்தின் இறுதி நாளான 30ஆம் தேதி  ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.240‬‬ குறைந்து ஒரு சவரன் ரூ.42,880 ஆக விற்பனையானது.   வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின்  விலை 42,320 ஆக விற்பனையாகியது .அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 66 ரூபாய் குறைந்து 5,290 ரூபாயாக உள்ளது.

gold

இந்நிலையில்  சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5285 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 42, 280 ரூபாயாக உள்ளது வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் 73.10 காசுகளாகவும் ஒரு கிலோ வெள்ளி 73 ஆயிரத்து 100ஆகவும் உள்ளது.