சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்துள்ளது.

தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 1ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை, 4ம் தேதி குறைந்தது. பின்னர், மீண்டும் 7ம் தேதி குறைந்தது. மற்ற அனைத்து நாட்களிலும் ஏற்றத்தையேக் கண்ட தங்கம் விலை நேற்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.4,438க்கும் ஒரு சவரன் ரூ.35,504க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. 

gold

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,419க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.35,352க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,800க்கும் விற்பனையாகிறது.