அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 45,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களா ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.  அதன்படி சென்னையில் 22 கேரட்  ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ. 5,720க்கும்,  ஒரு சவரன் ரூ. 45,760 க்கும் விற்பனை செய்யப்பட்டது.  சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து , ஒரு கிராம் வெள்ளி ரூ. 83 ரூபாய்க்கு விற்பனையானது.  

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 45,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 5,650-க்கு விற்பனை ஆகிறது.  வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலையும் அதிரடியாக ஒரு கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.81.50 எனவும், ஒரு கிலோ  வெள்ளி ரூ.81,500 எனவும் விற்பனையாகிறது.