தொடர்ந்து 2வது நாளாக குறைந்த தங்கம் விலை! - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

 
gold gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று  ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,485-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 10 பைசா உயர்ந்து ரூ.76.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold


 
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கு விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.03 குறைந்து ரூ.5,457-க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து 77.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.77,100ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.