தொடர் சரிவில் தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

சென்னையில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது.  ஒரு சவரன் 44,320 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து  ஒரு கிராம் தங்கம் 5,540 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்றைய தினமும் தங்கம் விலை குறைந்தது.  நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன்  44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,530 க்கும் விற்கப்பட்டது.  வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் 76 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.76,700க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 ஆக  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.