அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்க 5 ரூபாய் குறைந்து ஒரு  கிராம்  ஆபரண தங்கம் 5 ஆயிரத்து 495 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று அதிகரித்தது. கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 76 ரூபாய்  20 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்த நிலையில், இன்றும் சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.39 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.