தொடர்ந்து 3வது நாளாக சரிந்த தங்கம் விலை!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 43,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சரிந்துள்ளது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்க 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5 ஆயிரத்து 495 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.39 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் 43,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,455க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.