வாரத்தின் முதல் நாளில் குறைந்த தங்கம் விலை!

 
gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.44,168-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,521-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.79.30 ஆகவும்,  கிலோவுக்கு 300 ஆக உயர்ந்து ரூ.79,300 ஆக விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலை விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. இதேபோல் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.