தொடர் சரிவில் தங்கம் விலை - இல்லத்தரசிகள் குஷியோ குஷி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 842 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 560 குறைந்து, 43,280-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ,  ரூ. 5,410க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 76.50க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு, 160 குறைந்து, ரூ.43,120க்கு  விற்பனையானது. ஒரு கிராம் ரூ.20 குறைந்து 5,390க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.240‬‬ குறைந்து ஒரு சவரன் ரூ.42,880 ஆக விற்பனையானது.   வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனையானது.

gold

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 842 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 356 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 75 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.