மீண்டும் குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.43,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ.42,976 ஆகவும், கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் ரூ.5,372 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 43,280 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5, 410 ஆக விற்பனை செய்யப்பட்டது.  வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும்,  கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 500 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.