தொடர் சரிவில் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம்  44,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.  சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம்  44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 530 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  

gold

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.44,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரண ரூ.15 குறைந்து ரூ.5,515-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.77000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.