தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட தங்கம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 44,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய்ய் உயா்ந்து ஒரு சவரன் தங்கம் 44,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயா்ந்து 5,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.  வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து 78 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1000 ரூபாய் அதிகரித்து ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், இன்றும் தொடங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 44,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.  வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.