தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,040க்கும், கிராம் ரூ.8,755க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.69,680க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,440க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 8,975 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


