குறைந்தது தங்கம் விலை! - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold gold

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தது. அதாவது ஒரு கிராம் ஆபரணத் தங்கம்5350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 42,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இரண்டு நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்தது. 

இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 குறைந்து ரூ.5,338-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலை ஒரு கிராம் 20 பைசா குறைந்து ரூ.74.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.74500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.