தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரிப்பு!

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. தொழில்துறையில் நிலவும் தேக்கம் குறித்த அச்சமே இதற்கு காரணம். கடந்த ஆண்டு தொழில்துறையில் ஏற்பட்ட தேக்கம் முதலீட்டார்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பியது. இதனால், தங்கத்தின் தேவை பன்மடங்கு அதிகரித்து விலையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அச்சமயம் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைந்து தற்போது ரூ.35 ஆயிரத்தில் நீடிக்கிறது. 

gold

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ.4,443க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.35,544க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,800க்கும் விற்பனையாகிறது.