தொடர் சரிவுக்கு பின்னர் திடீரென அதிகரித்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கலக்கம்!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்கப்படுகிறது. 

சென்னையில் தொடர்ந்து 7 நாட்களாக குறைந்து வந்த தங்கம் இலை இன்று அதிகரித்துள்ளது. கடந்த 7 நாட்களில்  மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்தது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ரூ.5,209ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.69.00 ஆகவும்,  கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.69,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்தனர். 

gold

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்கப்படுகிறது.  இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5207-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,200-க்கு விற்பனையாகிறது. தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.