மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், நேற்று அதிரடியாக குறைந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,760க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 100 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,470க்கு விற்பனையானது.  சென்னையில்  சில்லறை விற்பனையில்  வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் 74 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  ஒரு கிலோ பார் வெள்ளி 74,000க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 44,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 40 உயர்ந்து 5,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை 1.40 உயர்ந்து 75.40க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் திடீர் விலையேற்றம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது