மீண்டும் அதிகரித்து வரும் தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

 
gold

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 உயர்ந்து 5,545 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.280 வரை உயர்ந்து ரூ.44,360 ஆகவும் விற்பனையானது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்தது.ஒரு கிராம் வெள்ளி விலையும் 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,000 எனவும் விற்பனையாகிறது 

இந்நிலையில், இன்ற் சென்னையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 565க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.