மீண்டும் அதிகரித்த தங்கம் விலை! - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,320 ஆக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்தது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 45,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 5,650-க்கு விற்பனை ஆனது. இதேபோல் அன்றைய தினம் வெள்ளி விலையும் குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.81.50 எனவும், ஒரு கிலோ  வெள்ளி ரூ.81,500 எனவும் விற்பனையானது. இந்நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வந்தது. அதன் படி நேற்று ஒரு சவரன்  45,200 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,320 ஆக விற்பனையாகி வருகிறது. இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து 5,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.81.00 எனவும், ஒரு கிலோ  வெள்ளி ரூ.81,000 எனவும் விற்பனையாகிறது.