மீண்டும் அதிகரித்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,320 ஆக விற்பனையானது. இதேபோல் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து 5,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 45,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து 5,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00 எனவும், ஒரு கிலோ  வெள்ளி ரூ.81,000 எனவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30 பைசா உயர்ந்து ரூ.81.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.81,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.