மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 44,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் தங்கம் ரூ. 60 குறைந்து ரூ. 5,605-க்கு விற்பனை ஆனது.  வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 80.40-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினமாக ஞாயிற்று கிழமை அதே விலையில் தங்கம் விலை நீடித்தது. 

இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.