அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த மாதம் ஏற்ற, இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் விலை, இந்த மாதத்தின் முதல் நாளான கடந்த சனிக்கிழமை உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் குறைந்தது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் 5435 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.43,480 ஆகவும் விற்பனையானது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.17 உயர்ந்து ரூ.5,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30 பைசாக்கள் உயர்ந்து ரூ.75.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.75,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.