தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட தங்கம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 224 அதிகரித்து ஒரு சவரன் 44,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 136 அதிகரித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ44,416க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,552க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் அதிகரித்தது.   அதன்படி சில்லறை விற்பனையில் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 80.40 காசுகளுக்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400க்கு விற்பனையானது.

gold

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224  அதிகரித்துள்ளது. அதன்படி  சென்னையில்  இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 அதிகரித்து ஒரு சவரன் 44,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ. 28 அதிகரித்து ரூ. 5,580-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.78.40க்கும், ஒரு கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ. 78,400க்கும்  விற்பனையாகி வருகிறது.