தங்கம் விலை இன்று உயர்வு - ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்தது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5,500-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்தது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 43,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold

இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.76 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.